தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நீண்ட நாள் கனவு பலித்தது.. விடுதலை 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு! - viduthalai 2 release date - VIDUTHALAI 2 RELEASE DATE

Viduthalai 2 release date: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடுதலை பாகம் 2 ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

விடுதலை 2 போஸ்டர்
விடுதலை 2 போஸ்டர் (Credits - Vijay sethupathi X page)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 29, 2024, 7:31 PM IST

சென்னை:தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கி முக்கியமான இயக்குநராக அறியப்படுபவர் வெற்றிமாறன். இவரது அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன், சிறந்த படமாக ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி கதாநாயகனாக நடித்து, கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'விடுதலை பாகம் 1'. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

சூரி கதாநாயகனாக அறிமுகமாகிய இப்படம், திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையமைத்து பாடிய 'வழிநெடுக காட்டுமல்லி' பாடல் அனைவரையும் கவர்ந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வந்தது. இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பாராட்டுக்களைக் குவித்தது. இதனைத் தொடர்ந்து, 'விடுதலை 2' எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

விடுதலை முதல் பாகத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் சிறிய அளவில் மட்டுமே இருந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தில் முழுவதும் விஜய் சேதுபதியை மையமாகக் கொண்டு கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யாப், கிஷோர், கென் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தாண்டு டிசம்பர் 20ஆம் தேதி விடுதலை இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:"மலையாள நடிகர்கள் சங்கத்தினர் பதவி விலகியது கோழைத்தனம்".. நடிகை பார்வதி விளாசல்! - Parvathy about hema committee

ABOUT THE AUTHOR

...view details