தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

எனக்கு இன்ஜினியரிங் வேண்டாம்பா.. இணையத்தை கலக்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு ட்ரெய்லர்! - NOVP trailer out - NOVP TRAILER OUT

Nanban oruvan vantha piragu: இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிப்பில் ஆனந்த் இயக்கி, நடித்துள்ள நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நண்பன் ஒருவன் வந்த பிறகு ட்ரெய்லர் போஸ்டர்கள்
நண்பன் ஒருவன் வந்த பிறகு ட்ரெய்லர் போஸ்டர்கள் (Credits - ar rahman x page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 6:50 PM IST

சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரும், நடிகருமாக வலம் வருபவர் வெங்கட்பிரபு. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் வித்தியாசமான முறையிலும், காமெடியாகவும் அமையும்.

இந்நிலையில், இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிப்பில், ஆனந்த் இயக்கி நடித்துள்ள படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. இப்படத்தில் கேபிஒய் பாலா, ஆர்.ஜே.விஜய், குமரவேல், பவானி ஸ்ரீ, இர்பான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ளார். இதில் 2 பாடல்களை தனுஷ், ஜி.வி பாடியுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. ட்ரெய்லர் தொடக்கத்தில், “கதாநாயகன் இன்ஜினியரிங் எனக்கு வேண்டாம்.. விஸ்காம் லயோலா காலேஜ், தளபதி விஜய் அவருடன் கூட அந்த காலேஜ் தான் அப்பா என்ற டயலாக் உடன் தொடங்குகிறது.

அதனையடுத்து, தில்லு முல்லு படத்தில் ரஜினி பேசும் டயலாக்குடன் ட்ரெய்லர் மூவ் ஆகிறது. பின்னர், நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து event management ஆரம்பிக்கிறார்கள். மேலும், இப்படம் இளம் தலைமுறை நட்பைப் பற்றி பேசக்கூடிய படமாக உருவாகி உள்ளது. இந்த ட்ரெய்லரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நண்பன் ஒருவன் வந்த பிறகு பாடலும் பின்னணி இசையில் அமைந்துள்ளது. இப்படம் வரும் ஆக.2-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:"ரகு தாத்தா இந்திக்கு எதிரான படமல்ல.." - கீர்த்தி சுரேஷ் விளக்கம்! - Keerthy Suresh about Hindi

ABOUT THE AUTHOR

...view details