தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"உங்கள லீட் பண்ண போறது புது லீடர்" - மாஸ் வசனத்துடன் வெளியானது 'கோட்' டிரெய்லர்! - GOAT trailer - GOAT TRAILER

GOAT TRAILER: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'கோட்' படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளில் வைரலாகி வருகிறது.

கோட் டிரெய்லர் போஸ்டர்
கோட் டிரெய்லர் போஸ்டர் (Credit - T Series Youtube page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 5:12 PM IST

சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் கோட்(Greatest of all time). யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. லியோ படத்திற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய், வெங்கட் பிரபு கூட்டணி உருவானது.

டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கோட் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.. இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். மேலும் தான் கமிட்டாகியுள்ள படங்கள் நடித்துவிட்டு நடிப்புக்கு குட்பை சொல்லப்போவதாக அறிவித்தார். இதனால் சோகமடைந்த ரசிகர்கள், கோட் திரைப்படத்தையும், அடுத்து விஜய்யின் 69வது படத்தையும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து கோட் படப்பிடிப்பு முடிந்து படக்குழு ப்ரமோஷனில் இறங்கும் எனவும், இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். மறுபக்கம் கோட் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. மேலும் இசை வெளியிட்டு விழாவும் நடைபெறாது என தெரிகிறது. அதே வேளையில் கோட் படக்குழு அவ்வப்போது படத்தின் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

கோட் பட டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு கோட் டிரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்த டிரெய்லர் 'அண்ணன் வரார் வழி விடு' உங்கள லீட் பண்ண போறது புது லீடர் என்ற பல்வேறு வசனங்கள் இடம்பெற்றுள்ளது. அதோடு, ’Lion is Always a Lion’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது விஜய் ரசிகர்களை மேலும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தேசிய விருது வென்றுள்ள திரைப்படங்கள் இடம்பெற்றுள்ள ஒடிடி தளங்கள் என்ன? - National award films in OTT

ABOUT THE AUTHOR

...view details