சென்னை:மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கேரள அரசு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. அனைத்து மொழி சினிமா துறையிலும் ஹேமா கமிட்டி பெரும் பேசுபொருளான நிலையில், மலையாள நடிகைகள் பலர் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக பல்வேறு மொழியைச் சேர்ந்த கலைஞர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகை ராதிகா, மலையாள திரைத்துறையில் படப்பிடிப்புத் தளத்தில் கேரவனில் கேமரா இருந்ததாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஹேமா கமிட்டி அறிக்கை குறித்தும், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்தும் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது முக்கியம். அதற்கான ஆரம்பமாக கேரளா ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.