ஹைதராபாத் : கடந்த 2022ம் ஆண்டு ரிச்சர்ட், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான இணையத் தொடர் 'சிட்டாடல்' இந்த தொடரின் அடுத்த பாகத்துக்கு "Citadel: Honey Bunny" என தலைப்பிடப்பட்டுள்ளது. 'தி ஃபேமிலி மேன்', 'பர்ஸி' உள்ளிட்ட தொடர்களை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இந்த தொடரை இயக்கி உள்ளனர்.
இதில், வருண் தவான், சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், கே.கே.மேனன், சிம்ரன், சாகிப் சலீம், சிக்கந்தர் கெர், சோஹம் மஜும்தார், சிவன்கித் பரிஹார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த தொடரின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ட்ரெய்லரின் தொடக்கத்தில், இங்கே ஒருவரை விட மற்றொருவர் மோசமானவர்கள். அவர் உங்களை வீழ்த்துவாரா? அல்லது நீங்கள் அவரை வீழ்த்த போகிறீர்களா? என்ற டயலாக்வுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. இந்த ட்ரெய்லரில் சமந்தாவுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவரைப் பாதுகாப்பதில் சமந்தா முக்கியத்துவம் காட்டுகிறார்.
இதையும் படிங்க :சிவாஜி கணேசன், பீம்சிங் உன்னத உறவு... பீம்சிங் நூறாவது பிறந்த நாளில் நடிகர் பிரபு புகழாரம்!