சென்னை: சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள உதயம் திரையரங்கம் விரைவில் மூடப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பிச் செல்லும் திரையரங்குகளில் ஒன்றாக விளங்கியது, உதயம் திரையரங்கம். சென்னையில் அதிகம் மக்கள் புழங்கும் பகுதியில் ஒன்றான அசோக் நகரில் அமைந்ததாலும், குறைந்த விலையில் டிக்கெட் விற்கப்பட்டதாலும் அதிக மக்களை இது ஈர்த்தது.
பின்னர், சென்னையில் பல்வேறு மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், புதிய தொழில்நுட்பங்களுடன் தோன்றிய நிலையில், உதயம் திரையரங்கம் காலத்திற்கு ஏற்ப மாறுதல் செய்யாததால் மக்கள் வரவு குறைந்தது. இதனால் உதயம் திரையரங்க உரிமையாளர், திரையரங்கத்தை முன்னணி கட்டுமான நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
இவ்வாறு உதயம் திரையரங்கம் மூடப்படுவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு சினிமா ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது. இதயம் கிறீச்சிடுகிறது.