சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து திரைப்பட நிகழ்வில், இசை, மொழி ஆகியவற்றில் எது பெரியது என பெரிய சிக்கலாக பேசப்பட்டு வருகிறது. இசை எந்தளவிற்கு பெரியதோ அந்தளவிற்கு மொழியும் பெரியது, இரண்டும் ஒன்று சேர்ந்தால் தான் பாட்டு வரும், இசை உயர்ந்ததாக திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு.
இதை புரிந்து கொள்பவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவ்வாறு பேசியதன் மூலம் இளையராஜாவை வைரமுத்து மறைமுகமாக சாடியதாக ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தனக்காக மக்கள் பேசத் தொடங்கியுள்ளதால், தான் அமைதியாக இருப்பதாக வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனைதொடர்ந்து இளையராஜா, வைரமுத்து விவகாரத்தில் கங்கை அமரன் வைரமுத்துவை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “வைரமுத்து எங்களால் மேலே வந்தவர், எங்களையே காலில் போட்டு மிதிப்பது போல் பேசுகிறார். வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவின் போட்டோவை வைத்து தினம் வணங்க வேண்டும். தன்னை தானே புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்கக்கூடிய கவிஞர்கள் யார் இருக்கின்றனர்?