தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

’Encounter Specialist Arrived’.. வேட்டையன் டீசர் வெளியானது! - VETTAIYAN PREVUE OUT NOW - VETTAIYAN PREVUE OUT NOW

Vettaiyan Prevue: இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் டீசர் வெளியானது.

வேட்டையன் டீசர் போஸ்டர்
வேட்டையன் டீசர் போஸ்டர் (Credits - LycaProductions X account)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 7:29 PM IST

சென்னை: லைகா புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. இத்திரைப்படம் வரும் அக் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

டி.ஜே.ஞானவேல் இதற்கு முன்பு கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ’ஜெய் பீம்’ படமானது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமூக நீதி பேசும் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வேட்டையன் படத்தில் இதுவரை வெளியான கதாபாத்திரம் அறிமுக வீடியோ கவனம் பெற்றது.

இதையும் படிங்க:வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி ஸ்பீச் எப்படி இருக்கப் போகிறது? - Vettaiyan audio launch

இந்நிலையில், இன்று (செப் 20) வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே ’மனசிலாயோ’ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் 'Hunter Vantaar' பாடலும் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் Prevue எனப்படும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ’Encounter Specialist’ என்ற டயலாக் உடன் டீசர் மூவ் ஆகிறது.

பின்னர், ’நமக்கு தான் எஸ்பி என்கின்ற பெயரில் எமன் வந்துருக்கான் ல ’ என ரஜினிகாந்தை குறிப்பிடும் வசனங்களும் டீசரில் இடம்பெற்றுள்ளது. அதன் மூலம் வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் எஸ்பியாக உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. தற்போது இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details