சென்னை: பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தற்போது குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு மீண்டும் புதிய படங்கள் திரையரங்குகளுக்கு வரவிருக்கின்றன. இந்த வார இறுதியில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் குடும்பங்களையும் குழந்தைகளையும் மையப்படுத்திய படங்களாக அமைந்துள்ளன.
பாட்டல் ராதா:பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் ’பாட்டல் ராதா’. இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி, பரி இளவழகன் ஆகியோர் நடித்துள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
குடும்பஸ்தன்: மணிகண்டன், குரு சோமசுந்தரம், இயக்குனர் சுந்தர்ராஜன், மேக்னா சான்வே ஆகியோர் நடிப்பில் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ள திரைப்படம் ’குடும்பஸ்தன்’. சுயாதீன இசைக்கலைஞர் வைசாக் இசையமைக்கிறார். இந்த படத்தை சினிமாகாரன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மிடில் கிளாஸ் குடும்பங்களின் பொருளாதர சிக்கல்களை நகைச்சுவையாக கையாண்டிருக்கும் இப்படம் ஜனவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்: இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஹரி பாஸ்கர், லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ (Mr Housekeeping). இதில், பிக் பாஸ் ரயான், ஷா ரா, சித்ரா லட்சுமணன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஓஷோ வெங்கட் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி, இன்வேட் மீடியா சார்பில் நிதின் மனோகர் தயாரித்துள்ள இத்திரைப்படம் திரையரங்குகளில் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகிறது.
குழந்தைகள் முன்னேற்றக் கழகம்: சமீபத்தில் மறைந்த, இயக்குநர் சங்கர் தயாள் இயக்கியுள்ள ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’. குழந்தை நட்சத்திரங்களான இமயவர்மன், அத்வைத், ஹரிகா படேடா ஆகியோர் நடித்துள்ளனர். யோகிபாபு, செந்தில் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து, அரசியல் காமெடியாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜனவரி 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
வல்லான்: இயக்குனர் சுந்தர் சி நடிப்பில் மணி சேயோன் இயக்கியுள்ள படம் ’வல்லான்’. இப்படத்தில் தான்யா ஹோப், ஹெபா பட்டேல், அபிராமி வெங்கடாச்சலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், டிஎஸ்கே ஆகியோர் நடித்துள்ளனர். விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் வல்லான் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகிறது.