தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தேவரா, மெய்யழகன், டிமான்டி காலனி 2... இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடிகளில் வரிசை கட்டும் திரைப்படங்கள்! - theatrical and OTT releases - THEATRICAL AND OTT RELEASES

Tamil theatrical and OTT releases: இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் தமிழ் படங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்

இந்த வாரம் திரையரங்குகள், ஒடிடி ரிலீஸ்
இந்த வாரம் திரையரங்குகள், ஒடிடி ரிலீஸ் (Credits - Film posters)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 26, 2024, 4:27 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகள் மற்றும் ஒடிடியில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. திரையரங்குகளில் வரவேற்பை பெறாத படங்கள் ஒடிடியில் வெளியாகி பாராட்டை பெற்றுள்ளன. அந்த வகையில் இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஒடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

மெய்யழகன்: 96 படத்தை இயக்கி தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த பிரேம் குமார் இயக்கியுள்ள திரைப்படம் ‘மெய்யழகன்’. இப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உறவுகளின் முக்கியத்துவத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மெய்யழகன் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நாளை (செப்.27) வெளியாகிறது.

தேவரா: கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சயிஃப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'தேவரா' (Devara) நாளை (செப்.27) உலகமெங்கும் உள்ள திரையங்குகளில் வெளியாகிறது. பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஜூனியர் என்டிஆர் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடித்து 6 ஆண்டுகளுக்கு பிறகு தேவரா திரைப்படம் நாளை வெளியாவதால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹிட்லர்: இயக்குநர் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, கௌதம் மேனன், கிங்ஸ்லீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஹிட்லர்’. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நாளை (செப்.27) தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘ஹிட்லர்’ படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சட்டம் என் கையில்’: இயக்குநர் சச்சி இயக்கத்தில் சதீஷ், வித்யா பிரதீப், மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘சட்டம் என் கையில்’. இப்படம் நாளை (செப்.27) திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த வார ஒடிடி ரிலீஸ்

டிமான்டி காலனி 2: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'டிமான்டி காலனி 2'. திகில் பட ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் 'டிமான்டி காலனி 2' திரைப்படம் Zee5 ஒடிடி தளத்தில் நாளை (செப்.27) வெளியாகிறது.

சூர்யா சாட்டர்டே (Surya saturday): விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, எஸ்.ஜே.சூர்யா, ப்ரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஆக்‌ஷன் திரைப்படம் ‘சூர்யா சாட்டர்டே’ (Surya saturday). இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ‘சூர்யா சாட்டர்டே’ திரைப்படம் இன்று (செப்.26) நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'வேட்டையன்' டீசரில் ட்ரோல் செய்யப்பட்ட அமிதாப் குரல்... படக்குழு எடுத்த அதிரடி முடிவு! - Amitabh bachchan voice in vettaiyan

கொட்டுக்காளி: பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கொட்டுக்காளி’. இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே உலகின் பல திரைப்பட விழாக்களில் பல விருதுகளை பெற்றது. திரையங்குகளில் வெளியாகி பாராட்டை பெற்ற கொட்டுக்காளி திரைப்படம் நாளை (செப்.27) அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details