சென்னை:90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பெண்களின் மனம் கவர்ந்த நடிகராகவும் வலம் வந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த். இவரது படங்கள் தற்போது வரையிலும் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர் இன்று தனது பிறந்த நாளை தனது ரசிகர்கள் உடன் கொண்டாடினார்.
மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்குத் தலைக்கவசம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த், அவரது அப்பா தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரசாந்த் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், அவர் நடித்த அந்தகன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இவரது பிறந்தநாளை முன்னிட்டு கோட் படக்குழு இவருக்குச் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கூறியதாவது, “தனது பிறந்தநாளுக்குக் கோட் படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டது மகிழ்ச்சியாக உள்ளது. போஸ்டர் பார்க்கும் போதே த்ரில்லிங்காக உள்ளது. அதைப் பார்த்து நிறையப் பேர் எனக்கு போன் செய்து பாராட்டினார்கள். அதற்கு இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் தான் காரணம் அவர்களுக்கு நன்றி.