தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'ப்ளூ ஸ்டார்' திரைப்பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு! - ப்ளூ ஸ்டார் படக்குழு

Blue Star Movie: ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

The film crew celebrated Blue Star movie victory by cutting a cake
ப்ளூ ஸ்டார் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 5:20 PM IST

சென்னை: இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்து கடந்த வாரம் (ஜன.25) வெளியான திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் தயாரித்துள்ளது.

அரக்கோணம் பகுதியில் இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியையும், கிரிக்கெட்டில் உள்ள உயர்சாதி அரசியல் பற்றியும் இப்படம் பேசுகிறது. அனைவரது சிறப்பான நடிப்பால் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக பிரித்வி பாண்டியராஜன் கதாபாத்திரமும், அவரது கவிதைகளும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

மேலும், கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிக்க வைக்கிறது. சாந்தனுவுக்கு இப்படம் நல்லதொரு அடையாளமாகவும், நீண்ட வருட காத்திருப்புக்கு பிறகு சிறந்த வெற்றியும் கிடைத்துள்ளது எனலாம். அரக்கோணம் பகுதியில் நடக்கும் நிகழ்வு, ஊர், காலனி என பிரிந்திருக்கும் இரண்டு பிரிவு மக்கள், சாதிய தீண்டாமை என கதை சொல்லியுள்ளார் இயக்குநர் ஜெயக்குமார்.

இதையும் படிங்க:பல்வேறு எதிர்பார்ப்புகளை குவித்து வரும் நரேனின் “ஆத்மா” படம்! எப்போது ரிலீஸ்?

அந்த வகையில், இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். சாந்தனு, அசோக் செல்வன், ப்ரித்வி, பா.ரஞ்சித் உள்ளிட்டோர் இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டனர். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அசோக் செல்வனின் சமீபத்திய படங்கள் வித்தியாசமான மற்றும் புதுமையான கதைக்களத்துடன் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றும் வருகிறது. கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான போர் தொழில் படம் இவருக்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. இந்நிலையில், இந்தாண்டு‌ தொடக்கத்திலேயே ப்ளூ ஸ்டார் படம் மூலம் வெற்றியை பெற்றுள்ளார் இவர். மேலும், தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக உயர்ந்து வருகிறார் அசோக் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ராசி இல்லாதா நடிகர்களா?... 'ப்ளூ ஸ்டார்' படம் மூலம் புத்துயிர் பெற்ற நடிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details