சென்னை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி ரவி மோகனின் `காதலிக்க நேரமில்லை', விஷ்ணுவர்தன் இயக்கத்தில் `நேசிப்பாயா', கிஷன் தாஸின் `தருணம்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. தேஜாவூ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். இவரது இயக்கத்தில் கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், ராஜ் அய்யப்பா ஆகியோர் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் தான் `தருணம்'. ’
எனை நோக்கி பாயும் தோட்டா’ இசையமைப்பாளர் தர்புகா சிவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். `முதல் நீ முடிவும் நீ' திரைப்படத்தின் மூலம் நமக்கு அறிமுகமானவர் நடிகர் கிஷன் தாஸ். அவரது கதாநாயகனாக நடித்திருக்கும் முதல் திரைப்படம் இது. ’தருணம்’ திரைப்படம் வெளியாகி ஒரு நாள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், நேற்று இத்திரைப்படத்தின் திரையிடல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. மேலும் படத்தை வேறு ஒரு தேதியில் மறுவெளியீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன்.
இதுகுறித்து படக்குழு தெரிவித்திருப்பதாவது, ”எங்கள் தரப்பில் சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் படத்தினை வெளியிட இயலவில்லை. மேலும் தமிழகம் தாண்டியும், வெளிநாடுகளிலும் தணிக்கை செய்து இப்படத்தினை வெளியிடுவதற்கான அவகாசமும் கிடைக்கவில்லை.