தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகர் அஜித் படத்தில் குண்டூர் காரம் நடிகை! வெளியானது குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்! - Good Bad Ugly Update - GOOD BAD UGLY UPDATE

நடிகர் அஜித்குமார் நடிப்பில் விரைவில் படபிடிப்பு தொடங்க உள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் கதாநாயகியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ajth kumar - Sreeleela
Ajth kumar - Sreeleela

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 4:01 PM IST

ஐதராபாத் : நடிகர் அஜித் குமாரின் 63வது படத்திற்கு குட் பேட் அக்லி என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை மார்க் ஆண்டனி புகழ் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.

இந்த படம் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் அஜித் மூன்று தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடைசியாக கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் வரலாறு படத்தில் நடிகர் அஜித் குமார் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

அதன்பின் ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் அஜித் மீண்டும் டிரிபிள் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் படபிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டு உள்ளது. படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் பணியில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் நடித்தவர் தான் இந்த ஸ்ரீலீலா. கடந்த 2022ஆம் ஆண்டு நடிகர் ரவிதேஜா, ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியான தமாகா, அதைத் தொடர்ந்து ஸ்கந்தா ஆகிய படங்களில் ஸ்ரீலீலா நடித்து இருந்தார்.

தமிழ் படங்களில் இதுவரை அவர் நடித்திராத நிலையில், குட் பேட் அக்லி படத்தின் மூலம் தமிழிலும் அவர் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குட் பேட் அக்லி படத்தில் ஸ்ரீலீலா நடிப்பது உறுதியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே நடிகர் அஜித், இயக்குநர் மகிழ் திருமேனியின் விடாமுயற்சி படத்தில் பிஸியாக உள்ளார்.

நடிகைகள் திரிஷா, பிரியா பவானி சங்கர், நடிகர்கள் அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். விரைவில் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க :பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! ராஜஸ்தான் பொதுக் கூட்டத்தில் அவதூறு கருத்து விவகாரத்தில் நடவடிக்கை! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details