தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இரட்டை வேடத்தில் சிம்பு.. STR48 அப்டேட்டை பிறந்தநாள் பரிசாக அளித்த படக்குழு! - Happy Birthday STR

STR48: நடிகர் சிலம்பரசனின் 48வது திரைப்படத்தின் தோற்றத்தை வெளியிட்டு, படக்குழு சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 6:25 PM IST

Updated : Feb 4, 2024, 3:54 PM IST

சென்னை: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் தனது 48வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். வரலாற்றுப் பின்னணியில் உருவாக உள்ள இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இதற்காக நீண்ட முடி தாடியை வளர்த்து வருகிறார், நடிகர் சிம்பு.

நடிகர் ரஜினிக்கு சொல்லப்பட்ட இந்த கதை, சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனதால், நடிகர் சிம்பு அந்த கதையில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், சிலம்பரசன் இரு கதாபாத்திரங்களில் தோன்றும் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் சிலம்பரசன் நாளை தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். இந்த நிலையில், அவரது 48வது திரைப்படத்தில் பிரத்யேகத் தோற்றத்தை வெளியிட்டு, தயாரிப்பாளர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது 48வது திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், புதிய போஸ்டர் அதை உறுதிப்படுத்தும் விதமாக வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வடக்குப்பட்டி ராமசாமி; ரசிகர்களுடன் படம் பார்த்த சந்தானம்!

Last Updated : Feb 4, 2024, 3:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details