ETV Bharat / state

கீழ்ப்பாக்கமே இருண்டது.. ஒன்றரை வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி.. குமுறி அழும் புல்லாபுரம் மக்கள்! - CHENNAI CHILD MURDER CASE

சென்னையில், ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புல்லாபுரம் பகுதி
புல்லாபுரம் பகுதி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 11 hours ago

Updated : 11 hours ago

சென்னை: சென்னையில் கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் பெண் தனது ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் தகவல் தெரிவிக்கையில், சென்னை, கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் 32 வயதான பெண். இவருடைய கணவர் தனியார் கொரியர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில், கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெண் தன்னுடைய தாய் வீடான கீழ்ப்பாக்கத்தில் உள்ள புல்லாபுரம் பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழ்ப்பால் போட்டுக்கொண்டு, தனது ஒன்றரை வயது குழந்தையை கொன்றுவிட்டு மற்றொரு 4 வயது குழந்தையை கொல்ல முயன்று தானும் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.

கதவை திறந்தால் அதிர்ச்சி

குழந்தையின் அலறல் சத்தம் வெளியே கேட்ட நிலையில், தாய் வீட்டின் கதவை தட்டி திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சென்று பார்த்த போது, ரத்த வெள்ளத்துடன் இரு குழந்தைகளும், பெண்ணும் கீழே கிடந்துள்ளனர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

குழந்தை உயிரிழப்பு

சம்பவ இடத்திற்கு விரைந்து, உடனடியாக அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் ஒன்றரை வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிர் இழந்திருப்பது தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து போலீசார், குழந்தைகளை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சம்பவம் நடந்த இடத்தில் சூழ்ந்திருந்த அப்பகுதி மக்கள் கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடலை மருத்துவ பணியாளர்கள் கொண்டு சென்ற போது குமுறி அழுத நிகழ்வு காண்போரை கலங்கடித்தது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால், 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.

Last Updated : 11 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.