சென்னை: ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆலியா பட், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் (RRR). இப்படம் பெரும் பொருட்செலவில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது.
சுதந்திரதிற்கு முந்தைய காலகட்டத்தில் ராம் மற்றும் கோமரம் பீம் என்ற இரு நண்பர்களின் கற்பனை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் இப்படத்தின் இசையமைப்பாளர் கீராவணி இசையில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்தது. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மூலம் ராஜமௌலி உலக அளவில் பிரபலமடைந்தார்.
ஆர்.ஆர்.ஆர் படத்தில் சண்டைக் காட்சிகள் பாடல்கள், வசனம் என அனைத்தும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தை உலக அளவில் பிரபல இயக்குநரான ஸ்பீல்பேர்க் பாராட்டினார். ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உலக அளவில் 1200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்தியாவிற்கு நிகராக மேற்கத்திய நாடுகளில் ரசிக்கப்பட்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை பெற்ற நிலையில், இந்தியாவில் விமர்சகர்கள் ஒரு பொழுதுபோக்கு கமர்சியல் படமாக கருதினர்.