ஹைதராபாத்:ஆஸ்கர் 2025 விருதுகளுக்கான இறுதிக்கட்ட பரிந்துரைப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்பானிஷ் மொழித் திரைப்படமான ’Emilia perez’ 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆங்கிலம் அல்லாத பிற மொழித் திரைப்படங்களில் அதிகளவில் பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
Emilia perez சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் விருதுக்காக jacques audiard, சிறந்த நடிகை sofia gascon, சிறந்த துணை நடிகை Zoe saldana, சிறந்த தழுவிய திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த ஒப்பனை உள்ளிட்ட பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Emilia perez படத்தின் சிறப்பம்சங்கள்
மியூசிக்கல் டிராமா ஜானரில் உருவாகியுள்ள Emilia perez என்ற ஸ்பானிஷ் திரைப்படம் திருநங்களைகள் குறித்த கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள Emilia perez திரைப்படம், கடந்த 2019ஆம் ஆண்டு 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்ட ’Roma’ என்ற படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
Emilia perez படத்தை எங்கு பார்க்கலாம்?
Emilia perez திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான இப்படம், ஆஸ்கர் பரிந்துரைக்கு பிறகு பிரபலமடைந்துள்ளது. சிறந்த காமெடி மற்றும் இசை ஆகிய பிரிவுகளில் ஏற்கனவே கோல்டன் குளோப் விருது வென்றுள்ள Emilia perez திரைப்படம், சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த திரைப்படப் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படங்கள்:
- Emilia Pérez (13 nominations)
- Wicked (10 nominations)
- The Brutalist (10 nominations)
- Anora (6 nominations)
- Conclave (8 nominations)
- A Complete Unknown (8 nominations)
- Dune: Part Two
- Nickel Boys
- The Substance
- I’m Still Here
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நடிகைகள்
இந்த பிரிவில் Emilia perez என்ற படத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள karla sofia gascon ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள முதல் திருநங்கை நடிகை என்ற சாதனையை படைத்துள்ளார்.
- Cynthia Erivo - Wicked
- Karla Sofía Gascón - Emilia Pérez
- Mikey Madison - Anora
- Demi Moore - The Substance
- Fernanda Torres - I'm Still Here