சென்னை: சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான ’அமரன்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தற்போது வரை வசூல் சாதனை படைத்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதனையடுத்து 24வது படத்தின் டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் சுதா கொங்குரா இயக்கத்தில் ’புறநானூறு’ படத்தில் நடிக்கவுள்ளது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
புறநானூறு திரைப்படத்தில் முன்னதாக சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது. பின்னர் அவர்கள் விலகியதால் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். மேலும் அவருக்கு வில்லனாக லோகேஷ் கனகராஜ், நிவின் பாலி ஆகியோரது பெயர்கள் அடிபட்டது. ஆனால் தற்போது ஜெயம் ரவி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்கவுள்ளது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.