தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகர் சூர்யா படத்தை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி? விஜய்க்கு சொன்ன கதையா? - RJ balaji Suriya Combo - RJ BALAJI SURIYA COMBO

RJ balaji to direct suriya: பிரபல நடிகர் சூர்யாவின் 45வது திரைப்படத்தை, நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி
நடிகர் சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 24, 2024, 11:03 AM IST

சென்னை: ரேடியோ பண்பலையில் ஆர்ஜேவாக இருந்த பிரபல நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, சுந்தர் சி இயக்கிய 'தீயா வேலை செய்யனும் குமாரு' படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தார். அதன் பிறகு சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து எல்கேஜி (LKG) படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். எல்கேஜி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாராவை வைத்து ’மூக்குத்தி அம்மன்’ படத்தை இயக்கினார்.

மேலும் ’வீட்ல விஷேசம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி சூர்யாவிடம் கூறிய கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ட்ரீம் வாரியர்ஸ் (Dream warriors) நிறுவனம் தயாரிப்பில், சூர்யாவை இயக்க ஆர்.ஜே.பாலாஜி ஒப்பந்தமாகியுள்ளார் என தெரிகிறது.

தற்போது சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த மாத இறுதியில் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் பணிகள், 'கங்குவா' படத்தின் வெளியீட்டீற்கு பிறகு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், படத்தில் பணியாற்றக் கூடிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "லப்பர் பந்து கிரிக்கெட் சார்ந்த தனித்துவமான திரைப்படம்" - அஷ்வின் பாராட்டு! - ashwin praised lubber pandhu

ஆர்.ஜே பாலாஜி இயக்கும் திரைப்படங்கள் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படங்களாக இருக்கும். அவரது இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ஜே பாலாஜி ஏற்கனவே நடிகர் விஜய்க்கு கதை ஒன்றை கூறியதாகவும், ஆனால் அப்படம் திட்டமிட்டபடி நடைபெறவில்லை எனவும் முன்பு தனியார் சேனல் பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஜய்க்கு சொன்ன கதையில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details