ஹைதராபாத்:தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் அஜித் குமார். கார் பந்தயத்திலும் ஆர்வமுள்ள இவர், பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில்,துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது நடிகர் அஜித்குமார் கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. கார் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சியும் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அஜித் குமாருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிகிறது.
அஜித்குமார் புதிதாக தொடங்கியுள்ள கார் பந்தய நிறுவனம், துபாயில் வருகிற ஜனவரி 9 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பா கண்டத்தில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் பல்வேறு கார் பந்தய தொடர்களிலும் இந்நிறுவனம் கலந்துகொள்ள உள்ளது. அஜித் நிறுவனத்தின் அணி பங்கேற்க இருக்கும் முதல் கார் பந்தய தொடர் இது. இந்த தொடர் துபாயில் 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க:”கதையில சாவுனு வந்தாலே என் பெயரை எழுதிடுறாங்க” - ஆதங்கத்தை கொட்டிய கலையரசன்!