தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அமரன் படத்தின் முதல் பாடல் "ஹே மின்னலே" ரிலீஸ்! - AMARAN MOVIE SONG RELEASE - AMARAN MOVIE SONG RELEASE

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி இணைந்து நடிக்கும் அமரன் படத்தின் முதல் பாடல் "ஹே மின்னலே" ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஹே மின்னலே பாடல் காட்சி
ஹே மின்னலே பாடல் காட்சி (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2024, 10:29 PM IST

சென்னை:தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்து வருகிறது. இவரது டாக்டர், டான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக அமைந்தது. அவரது முந்தைய படமான மாவீரனும் அவருக்கு வெற்றி படமாகவே அமைந்தது எனலாம்.

வரவேற்பை பெரும் அமரன் கதாபாத்திரங்கள்:இந்த நிலையில் ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகி உள்ள படம் 'அமரன்'. இந்த படம் தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். இதில் சிவகார்த்திகேயன் (மேஜர் முகுந்த் வரதராஜன்) ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி (மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா) நாயகியாகவும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க:”ரொம்ப அழகாயிருக்கு”... கோட் படக்குழு விஜய்க்கு அளித்த மோதிர பரிசு!

சினிமா துறையில் நடிகைகள் மேக் அப், சிகிச்சை, திரபி என தங்களை அழகாய் மற்றி கொள்ளுவதற்கு மத்தியில் தனது எளிமையான தோற்றதாலும், இயற்கையாகவே அழகு என அழைக்கப்படும் நாயகியாக ரசிகர்களை ஈர்த்தவர் சாய்பல்லவி. முன்னதாக வெளியான அமரன் படத்தின் டீசர் மற்றும் இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தின் ரிவில் வீடியோ மூலம் சாய்பல்லவி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

தமிழக ராணுவ வீரரின் கதை:ஏற்கனவே பாலிவுட், டோலிவுட்டில் ராணுவ வீரர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ஷெர்ஷா, சீதா ராமம் போன்ற படங்கள் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தமிழ் மண்ணின் இராணுவ வீரரின் வாழ்க்கை கதையை படமாக எடுக்கும் முயற்சி அனைவரிடம் இருந்து பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த படத்தைராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

"அமரன்" படத்தின் முதல் பாடல் வெளியானது :அமரன் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று அமரன் படத்தின் முதல் பாடலான “ஹே மின்னலே” என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் ஜிவி பிரகாஷின் 700வது பாடலாகும். கார்த்திக் நேத்தா இப்பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை ஸ்வேதா மோகன், ஹரி சரண் ஆகியோர் பாடியுள்ளனர்.

பொதுவாக காமெடி கேரக்டரில் பார்வையாளர்களை கவரும் சிவகார்த்திகேயன் கடந்த சில படங்களில் புது வகை கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாக கட்டுமஸ்தான உடல்வாகுடன், ஆக்ரோஷமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எனவே இவ்வாறான தோற்றத்தில், சீரியஸான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டீசர் வெளியீட்டில் இருந்து சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி ஜோடி இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளதால் பார்வையாளர்கள் மத்தியில் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details