தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

டி.இமான் இசையில் முதல் முறையாகப் பாடிய முன்னணி பாடகர்! - singer mano D imman combo - SINGER MANO D IMMAN COMBO

Mano sings in D.Imman music: லெவன் திரைப்படத்திற்காக டி.இமான் இசையில் பாடகர் மனோ முதல் முறையாகப் பாடியுள்ளார்.

மனோ, டி.இமான் புகைப்படம்
மனோ, டி.இமான் புகைப்படம் (Credits ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 3:48 PM IST

சென்னை: ஏ.ஆர்.என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரைப்படம் 'லெவன்'. பல ஆண்டுகளாகத் திரையுலகில் தொடர்ந்து பயணித்து வந்த போதிலும், புத்தம் புது கூட்டணியாக இசையமைப்பாளர் டி.இமானும், பிரபல பாடகர் மனோவும் முதல் முறையாகக் கைகோர்த்துள்ளனர்.

இந்நிலையில், இமான் இசையில் விரைவில் வெளியாகவுள்ள 'லெவன்' திரைப்படத்திற்காக மனோ பாடியுள்ளார். உணர்ச்சிப் பூர்வமான இந்த பாடல் குறித்து பேசிய மனோ, "இமான் இசையைத் தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல் முறையாகப் பாடுவது மிக்க மகிழ்ச்சி. உயிரோட்டமிக்க இந்த பாடல் பெரிதும் வரவேற்கப்படும் என்று நம்புகிறேன்" என்றார்.

இது குறித்து பேசிய இசையமைப்பாளர் டி.இமான், "மனோவுடன் இணைந்து பணியாற்றவில்லை என்ற ஏக்கம் பல காலமாக இருந்தது, இன்று அது பூர்த்தியாகி உள்ளது. அவரது குரலுக்கு மிகவும் உகந்த பாடலை உணர்ச்சிப் பூர்வமாகப் பாடியுள்ளார்" என்று தெரிவித்தார். இப்பாடலின் வரிகளைக் கபிலன் எழுதியுள்ளார்.

'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான 'லெவன்' திரைப்படத்தை தங்களது மூன்றாவது திரைப்படமாக ஏ.ஆர்.என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர்.

இயக்குநர் சுந்தர்.சி-யிடம் 'கலகலப்பு 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும் 'ஆக்ஷன்' ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார்.

மேலும், இவர் இயக்குநர் ஷங்கரின் 'கேம்சேஞ்சர்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் 'விருமாண்டி' புகழ் அபிராமி, ஆடுகளம் நரேன், 'வத்திக்குச்சி' புகழ் திலீபன், 'மெட்ராஸ்' புகழ் ரித்விகா, அர்ஜை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். படத்தொகுப்பாளராகத் தேசிய விருது பெற்ற ஸ்ரீ காந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார். 'லெவன்' படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: ரசவாதி எப்படிப்பட்ட படம்? - இயக்குநர் சாந்தகுமார் பளீச் பதில்! - Rasavathi Movie

ABOUT THE AUTHOR

...view details