தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

”தளபதி 69 படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது”... கன்னட சூப்பர்ஸ்டார் கொடுத்த மாஸ் அப்டேட்! - SHIVARAJKUMAR IN THALAPATHY 69

Shivarajkumar in Thalapathy 69: ’தளபதி 69’ படத்தில் நடிக்க படக்குழு தன்னை அணுகியுள்ளதாக கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தளபதி 69 படத்தில் நடிக்கும் சிவராஜ்குமார்
தளபதி 69 படத்தில் நடிக்கும் சிவராஜ்குமார் (Credits - @KvnProductions X account, ETV Bharat)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 13, 2024, 12:41 PM IST

சென்னை: ’தளபதி 69’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாக நடிகர் சிவராஜ்குமார் கூறியுள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கும் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

நடிகர் விஜய் தனது அரசியல் பயணம் காரணமாக சினிமாவிலிருந்து விலகுவதாகவும், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் படமே தனது கடைசி திரைப்படம் என அறிவித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் தளபதி 69 திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகிறது. சமீபத்தில் தளபதி 69 படப்பிடிப்பு சென்னை ராணுவ அகாடமியில் நடைபெற்றது.

இதனிடையே தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் சிவராஜ்குமார் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “தளபதி 69 படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க என்னை படக்குழு அணுகியுள்ளனர்.

என்னுடைய தேதிகள் பொறுத்து அந்த படத்தில் நடிக்க முடியுமா என்று பார்ப்போம். விஜய் ஒரு நல்ல மனிதர். அடுத்து நடிப்பது தனது கடைசி படம் என கூறியுள்ளார். அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அவர் அரசியல் குறித்தும் நன்றாக பேசுகிறார்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பள்ளியாக மாறிய பிக்பாஸ் வீடு; திடீர் வைரலாகும் அருண், வர்ஷினி ஜோடி!

கன்னட சினிமாவில் மிகவும் பிரபல நடிகரான சிவராஜ்குமார் கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ’ஜெயிலர்’ படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் வரும் காட்சிகளுக்கு திரையரங்குகளில் விசில் பறந்தது. இந்நிலையில் தளபதி 69 படத்தில் சிவராஜ்குமார் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details