சென்னை: லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில், அனிருத் இசையில் தயாராகியுள்ள இப்படம் வருகிற ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
சேனாபதி ரிட்டன்ஸ்.. "TOM & Jerry ஆட்டம் ஆரம்பம்" - இந்தியன் 2 ட்ரெய்லர் வெளியானது! - INDIAN 2 TRAILER Highlights - INDIAN 2 TRAILER HIGHLIGHTS
Indian 2 Trailer : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 ட்ரெயலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Published : Jun 25, 2024, 7:27 PM IST
இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் அனிருத் பின்னணி இசை பிரமாண்டமாக அமைந்துள்ளது. மேலும், ட்ரெய்லரில் நடிகர் கமல்ஹாசன், “இது இரண்டாவது சுதந்திரப் போர்.. காந்தி வழியில் நீங்கள்..நேதாஜி வழியில் நான்” என மாஸான டயலாக் பேசுகிறார். இந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படிங்க:காந்தாரா கையில் 'கல்கி 2898 AD' புஜ்ஜி வாகனம்.. வெளியான மாஸ் கிளிக்ஸ்! - Rishab Shetty drives Kalki 2898 AD