தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ரூ.43 கோடி வசூலை நெருங்கும் ஷாகித் கபூர் நடித்த 'தேரி பாடன் மெய்ன் ஐசா உல்ஜா ஜியா' - தேரி பாடன் மெய்ன் ஐசா உல்ஜா ஜியா

Teri Baaton Mein Aisa Uljha Jiya: ஷாகித் கபூர், கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியாகியுள்ள தேரி பாடன் மெய்ன் ஐசா உல்ஜா ஜியா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை குவித்து வருகிறது.

Teri Baaton Mein Aisa Uljha Jiya
தேரி பாடன் மெய்ன் ஐசா உல்ஜா ஜியா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 1:23 PM IST

ஹைதராபாத்: அமித் ஜோஷி மற்றும் ஆராதனா சா இயக்கத்தில் ஷாகித் கபூர், கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான திரைப்படம் 'தேரி பாதோன் மேயின் அயிசா உலிஜா ஜியா' (Teri Baaton Mein Aisa Uljha Jiya).

ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் டிம்பிள் கபாடியா, தர்மேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியானது முதல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைத் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலைப் பெற்று வருகிறது.

பிரபல சினிமா வர்த்தக நிறுவனம் சாக்னில்க் அறிக்கையின் படி, ஞாயிறன்று 10.50 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேரி பாடன் மெய்ன் ஐசா உல்ஜா ஜியா திரைப்படம் கடந்த வெள்ளியன்று 6.70 கோடி ரூபாயும், சனிக்கிழமையன்று 9.65 கோடி ரூபாய் வரையும் என மொத்தமாக வார இறுதியில் 26.85 கோடி ரூபாய் வரை வசூலைக் குவித்துள்ளது. இப்படம் வெளியாகி 3வது நாளில் அதிகபட்சமாக சென்னையில் 71.33 சதவீதம் பேர் பார்த்துள்ளனர்.

அதே வேளையில் இந்தியில் மொத்தமாக, ஞாயிறன்று 24.64 சதவீதம் பேர் பார்த்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் 37 சதவீதம் பேர் இப்படத்தைப் பார்த்த நிலையில், புனேவில் 33.6 சதவீதம் பேர் இப்படத்தைப் பார்த்துள்ளனர்.

'தேரி பாடன் மெய்ன் ஐசா உல்ஜா ஜியா' படத்தின் வசூலைப் பொறுத்தவரை, கடந்த சனிக்கிழமையன்று 32.50 கோடி வரை வசூல் செய்திருந்தது. அதே நேரத்தில் ஞாயிறன்று இந்தியாவில் மொத்தமாக, 42.50 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. 3வது நாளில் உலகளவில் மொத்த வசூல் 50 கோடி ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details