தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஆர்.கே. சுரேஷின் ஒயிட் ரோஸ் ரிலீஸ் எப்போது? - தயாரிப்பாளர் தகவல்! - white rose tamil movie

white rose movie: அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் ஒயிட் ரோஸ் படம் விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ரஞ்சனி தெரிவித்துள்ளார்.

white rose tamil movie
ஒயிட் ரோஸ் திரைப்படம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 10:57 PM IST

சென்னை:பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வில்லனாகவும் விஜித், கயல் ஆனந்தியின் ஜோடியாக நடித்துள்ளார்கள். இவர்களுடன் புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அப்போது படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த இயக்குநர் சங்க மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இக்கதையில் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தின் மூலமாக சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.இளையாராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

கவிப்பேரரசு வைரமுத்து வரிகளுக்கு ’மெட்ரோ’ படப்புகழ் ஜோகன் செவனேஷ் பாடல்களுக்கு இசையமைக்க, சுதர்ஷன் எம். குமார் பிண்ணனி இசை அமைக்கிறார். டி.என். கபிலன் கலையை கவனிக்கிறார். படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படம் மிக விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ரஞ்சனி தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படம் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, சைக்கோ திரில்லர் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையாக 'ஒயிட் ரோஸ்' உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:“நானும் உதயநிதியும் ஒரே வீட்டில் பொண்ணு எடுத்திருக்கோம்” சிங்கப்பூர் சலூன் பட விழாவில் ஆர்.ஜே.பாலாஜி கலகல!

ABOUT THE AUTHOR

...view details