தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'சூர்யா 45' படத்தின் அப்டேட் வந்தாச்சு.. இயக்குநர் யார் தெரியுமா?

நடிகர் சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க இருப்பதாக, தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சூர்யா 45 போஸ்டர்
சூர்யா 45 போஸ்டர் (Credits -DreamWarriorPictures X Page)

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், ஸ்டோன் பென்ஞ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதில், சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும், ஜெயராம், கருணாகரன், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் சூர்யா நடிக்கும் 'சூர்யா 45' படத்தின் அறிவிப்பு இன்று( அக் 14) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், சூர்யாவின் 45வது படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க :’கைதி 2’ படத்தில் டில்லி முதல் லியோ வரை... லோகேஷ் கொடுத்த மெகா மாஸ் அப்டேட்!

மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் - சூர்யா கூட்டணி சில்லுனு ஒரு காதல், ஆயுத எழுத்து மற்றும் '24' படத்தை தொடர்ந்து, நான்காவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தமாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2025-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 'சூர்யா 45' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் போன்ற படங்களை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details