தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஹிப் ஹாப் ஆதி கான்செர்ட்டில் அடிதடி; கோவையில் இளைஞர்களால் பரபரப்பு! - Hip Hop aadhi concert - HIP HOP AADHI CONCERT

Hip Hop aadhi concert: கோவையில் நடைபெற்ற இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசை நிகழ்ச்சியில், இளைஞர்கள் அடிதடியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் ஹிப் ஹாப் ஆதி கான்செர்ட்டில் அடிதடியில் ஈடுபட்ட இளைஞர்கள்
கோவையில் ஹிப் ஹாப் ஆதி கான்செர்ட்டில் அடிதடியில் ஈடுபட்ட இளைஞர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 9, 2024, 3:10 PM IST

கோவை: பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி, கடைசியாக நடித்த திரைப்படம் 'பிடி சார்'. அடுத்ததாக ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள ‘கடைசி உலக போர்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேற்று (செப் 8) கோவை கொடிசியா மைதானத்தில் ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சி (Live in concert) நடைபெற்றது.

கோவையில் ஹிப் ஹாப் ஆதி கான்செர்ட்டில் அடிதடி (Video Credit - ETV Bharat Tamilnadu)

இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி பாடலுக்கு இளைஞர்கள் நடனமாடி கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் அடிதடி ஏற்பட்டது. இளைஞர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்து கொண்டதால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடிதடியில் ஈடுபட்ட இளைஞர்களை அழைத்து சென்றனர். இதனையடுத்து இளைஞர்கள் அடித்துக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் கூட்டம் அலைமோதியதால் பெரும் குளறுபடி ஆனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிபிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நாளை பிறந்தநாள்.. இன்று விவாகரத்து.. ஜெயம்ரவி கொடுத்த ஷாக்! - Jayam ravi divorce

ABOUT THE AUTHOR

...view details