மும்பை : இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த பிரபல கேளிக்கை நிறுவனமான வால்ட் டிஸ்னியும், ரிலையன்ஸ் நிறுவனமும் ஒன்றிணைய ஒப்புக் கொண்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம்18 தனியார் நிறுவனமும், பிரபல கேளிக்கை நிறுவனமான வால்ட் டிஸ்னியும் கூட்டாக இணைந்து வியாகாம்18 மற்றும் ஸ்டார் இந்தியா மூலம் பல்வேறு ஊடக நிகழ்ச்சிகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், நீதிமன்ற அனுமதி பெற்ற திட்டத்தின் மூலம் வியாகாம்18 நிறுவனம் ஸ்டார் இந்தியா பிரைவேட் நிறுவனத்துடன் இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.