தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"நன்றி, தலைவா"... 'கோட்' படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்...நெகிழ்ச்சியில் வெங்கட் பிரபு! - RAJINKANTH PRAISED GOAT MOVIE

Rajinkanth praised GOAT movie: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான கோட் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

கோட் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்
கோட் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த் (Credits - ETV Bharat Tamil Nadu, ANI)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 19, 2024, 10:50 AM IST

சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் 'கோட்' (GOAT). இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 450 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், விஜய் நடிப்பில் இரண்டு கதாபாத்திரங்கள் வரவேற்பை பெற்றது.

அதுவும் வில்லனாக விஜய், ஜீவன் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வழங்கியிருந்தார். இந்த கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பை சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். கோட் பட காட்சிகள் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் அதிகம் வலம் வருகிறது.

மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், படத்தில் பின்னணி இசை பாராட்டை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கோட் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் வெங்கட் பிரபுவை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து வெங்கட் பிரபு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நன்றி தலைவா!! கோட் படத்தை பார்த்து தொலைபேசியில் அழைத்து, முழு மனதுடன் பாராட்டியதற்காக மிகவும் நன்றி. உங்களது அளவுக்கடந்த அன்பிற்கு நன்றி” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:'ப்ளடி பெக்கர்' படத்திற்கு கவினை வேண்டாம் என்ற நெல்சன் - காரணம் என்ன?

ரஜினி, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் எலியும் பூனையுமாக சண்டை போட்டு கொள்ளும் இந்த நேரத்தில் கோட் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியது, ரஜினி, விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details