சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபத்தி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படம் இன்று (அக்.10) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
வேட்டையன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. சமூக நீதி கருத்துக்களை வலுவாக பேசும் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ’வேட்டையன்’ படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும் இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே ரஜினிகாந்துடன் இணைந்துள்ளது மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அனிருத் இசையில் மனசிலாயோ மற்றும் hunter vantaar ஆகிய பாடல்கள் ரசிகர்களை முனுமுனுக்க வைத்துள்ளது. வேட்டையன் திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் வேட்டையன் திரைப்படமும் ஜெயிலர் போல் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.