தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழா எப்படி இருந்தது..ரஜினிகாந்த் கூறிய தகவல்! - Rajinikanth - RAJINIKANTH

Rajinikanth: மும்பை ஜாம்நகரில் மிகப் பிரம்மாண்டமாக நடந்த ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 7:11 AM IST

சென்னை:நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் முடிந்தது. இதையடுத்து ரஜினி ஒய்வு எடுக்க துபாய், இமயமலை சென்றிருந்தார். பின்னர் பிரதமர் மோடி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் பதவி ஏற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதையடுத்து ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' (Coolie 2025) படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அடுத்தக்கட்ட படபிடிப்புக்காக, கடந்த நான்காம் தேதி ரஜினிகாந்த் சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு சென்றிருந்தார்.

இதையும் படிங்க:அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்; பிரபலங்கள் சூழ களைகட்டிய கொண்டாட்டம்! - Anant Ambani Radhika wedding

இதனிடையே, மும்பை ஜாம்நகரில் நடைபெற்ற ஆனந்த அம்பானி ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யா உடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இந்த நிலையில், கூலி படப்பிடிப்பு, அம்பானி வீடு திருமண நிகழ்ச்சி என அனைத்தையும் முடித்துக் கொண்டு மும்பையில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார், ரஜினிகாந்த்.

இதையும் படிங்க:ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த்!

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், 'அம்பானி வீட்டின் கடைசி திருமண நிகழ்ச்சி மிகவும் கிராண்டாக நடத்தினர்; மகிழ்ச்சியாக இருந்தது. கமல் நடிப்பில் வெளியாகியுள்ள 'இந்தியன் 2' (Indian 2) திரைப்படத்தை நாளைப் பார்க்க உள்ளேன் என்று பதிலளித்தார். தொடர்ந்து என்கவுண்டர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'நோ கமெண்ட்ஸ்' என ரஜினிகாந்த் பதில் அளித்தார். அதன் பின்னர், காரில் போயஸ் கார்டின் உள்ள இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.

இதையும் படிங்க: ராயன் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! படக்குழுவின் அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் குஷி! - Raayan trailer release date

ABOUT THE AUTHOR

...view details