தமிழ்நாடு

tamil nadu

சம்பளம் அதிகமாக கிடைப்பதால் பல தயாரிப்பாளர்கள் ஹீரோ ஆகிவிட்டனர்: தனஞ்செயன் - Producer dhananjayan

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 11:40 AM IST

Producer dhananjayan: இன்று நிறைய ஹீரோக்களின் சம்பளம் அதிகமாக இருக்கிறது எனவும், அதனால் சில தயாரிப்பாளர்கள் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டனர் எனவும் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்

பிதா படக்குழு
பிதா படக்குழு (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஸ்ரினிக் புரொடக்சன்ஸ் பாலசுப்பிரமணி தயாரித்து இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கியுள்ள திரைப்படம் பிதா. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் நடிகைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், வனிதா விஜயகுமார், ஷ்ரதா ராவ், தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குனர்கள் சரண், சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ”சினிமா ரொம்ப பவர்ஃபுல் மீடியா. இயக்குநர்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் அழகானது. சினிமாவை நாம் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. கிரியேட்டிவிட்டியின் உச்சகட்டம் சினிமா தான் என்று நினைக்கிறேன் இயக்குநருக்கு வாழ்த்துக்கள்” என கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “தமிழ் சினிமாவில் இன்னொரு தயாரிப்பாளர் ஹீரோவாக வருகிறார்.‌ தமிழ் சினிமாவில் இன்று நிறைய ஹீரோக்களின் சம்பளம் அதிகமாக இருக்கிறது. அதனால் சில தயாரிப்பாளர்கள் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டனர். ஹீரோக்கள், நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியவில்லை.

இங்கு டைட்டில் மேனேஜ்மென்ட் ரொம்ப தவறாக இருக்கிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு கோரிக்கையும் வைத்திருக்கிறோம். இந்த பிரச்சினையை (டைட்டில்) தவிர்க்க எல்லா சங்கங்களும் ஒன்று சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் காலகட்டத்தில் எல்லா ரசிகர்களும் வந்து படம் பார்க்கும் வகையில் படத்தை எடுக்க வேண்டும்” என்றார்

நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் சரண், ”பொதுவாக என்னை எந்த மேடையிலும் அதிகமாக பார்க்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் பல படங்களை எடுக்கக்கூடிய இளைஞர் ஒரு படம் பண்ணுகிறார்.‌ அந்த வகையில் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்தேன்.‌ வனிதா அவர்களையே கட்டி போட்டாங்கனா எல்லாரையும் கட்டி போட்டுவிட்டார்கள் என தெரிந்து விட்டது. லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தையும் பாராட்டியவர், மேடம் நான் சொல்வதெல்லாம் உண்மை” என நகைச்சுவையாக பேசினார்

இதனையடுத்து நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், “இன்று நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன், அனைவரது வாழ்க்கையிலும் ஒரு தேடல் இருக்கும். அதில் தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம், பெண்கள் குறிப்பாக அதிகமாக கொடுப்போம். இன்று நான் சந்தோசமாக இருக்க காரணம் இன்று என் இரண்டு படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆனது.

எத்தனையோ இளைஞர்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது அவ்வளவுதான் என்ற எண்ணத்தில் உள்ளனர். தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை, காதலில் தோல்வி அடைந்தால் தற்கொலை ஆகியவற்றை தாண்டி வெற்றி இருக்கிறது. நம்பிக்கையோடு விடாமல் முயற்சி செய்து கொண்டே இருங்கள், சினிமா என்பது சாதாரணமானது கிடையாது பொறுமை வேண்டும் என்பது போகப் போக தான் தெரியும்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நாஞ்சில் சம்பத், “தமிழர்கள் மத்தியில் ஒரு அதிர்வை உண்டாக்கும் படத்தை இயக்கியுள்ளார். படத்தை முடித்து விட்டோம் என்று இருந்தாலும் தணிக்கை என்ற பெயரில் சில பேர் செய்யும் அழிச்சாட்டியதற்கு எல்லை இல்லை. என்னை பொறுத்தவரை தமிழ் திரையுலகம் சர்வதேச அளவில் பேசப்படுகிற படங்களை இன்னும் தரவில்லை. அப்படிப்பட்ட கதைகள் கலைஞர்கள் எல்லாம் தமிழில் இருக்கிறது. ஆனால் சர்வதேச அளவில் ஒரு படத்தை எடுக்கக்கூடிய அளவிற்கு ஒரு படம் வரும்போது அதை இயக்கக் கூடியவர் கார்த்திக் குமார் என்று வர வேண்டும்” எனவும் வாழ்த்தினார்.

இதையும் படிங்க: வேலை செய்த இடத்திலேயே கெளரவம்.. புர்ஜ் கலிஃபாவில் ஜொலித்த விஜய் சேதுபதியின் மகாராஜா! - Maharaja celebration in Burj khalifa

ABOUT THE AUTHOR

...view details