சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன்தினம்(செப் 30) இரவு அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வரும் நிலையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அன்புமணி ராமதாஸ், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
மேலும் ரசிகர்களும் ரஜினிகாந்த் உடல்நலம் பெற வேண்டும் என வேண்டி வருகின்றனர். இதனிடையே ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "ரஜினிகாந்த் நேற்று (செப்.30) கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.