ஆந்திர பிரதேசம்:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் தனுஷ். இவர் தமிழ் மொழி மட்டுமின்றி இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடித்த படங்களும் பெரிய வரவேற்பை பெற்றன. சமீபத்தில் இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான் கேப்டன் மில்லர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. தற்போது இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில், தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், இப்படம் D51 என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.