தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Oscars 2024: 13 பிரிவுகளில் பரிந்துரை! எலைட்டை கோட்டைவிட்ட ஓபன்ஹெய்மர்! அது என்ன எலைட் பிரிவு? - ஓபன்ஹெய்மர்

Oscars 2024: ஆஸ்கர் விருதுக்கு 13 பிரிவுகளில் ஓபன்ஹெய்மர் படம் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், எலைட் பிரிவில் அந்த படம் இடம் பெறாமல் போனது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எலைட் பிரிவு என்றால் என்ன? அந்த பிரிவில் உள்ள படங்கள் என்னென்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 1:40 PM IST

Updated : Jan 27, 2024, 11:03 AM IST

ஐதராபாத் :2024ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியல் வெளியான நிலையில், பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹெய்மர் படம் 13 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. நடப்பாண்டில் அதிக ஆஸ்கர் விருதுகளுக்கு ஓபன்ஹெய்மர் படம் பரிந்துரைக்கப்பட்டு இருந்தாலும், நூலிழையில் எலைட் பட்டியலில் இடம் பிடிக்க அந்த படம் தவறியது, ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

96 ஆண்டுகால அகாடமி விருது வரலாற்றில் இதுவரை 3 படங்கள் மட்டுமே அதிக விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு எலைட் வரிசையில் முதல் மூன்று இடங்களில் உள்ளது. All About Eve (1950), Titanic (1997) மற்றும் La La Land (2016) ஆகிய மூன்று படங்கள் மட்டும் இதுவரை ஆஸ்கர் வரலாற்றில் அதிகபட்சமாக 14 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு சாதனை பட்டியலில் உள்ளது.

கிறிஸ்டோபர் நோலனின், ஓபன்ஹெய்மர் 13 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நூலிழையில் இந்த எலைட் வரிசையில் இடம் பிடிக்க தவறியது. 1950 ஆம் ஆண்டு 14 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட All About Eve படம் 6 ஆஸ்கர் விருதுகளை வென்று குவித்தது. அதேபோல், 1997ஆம் ஆண்டு Titanic படம் 11 விருதுகளையும், 2016ஆம் ஆண்டு La La Land படம் 6 விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

2024ஆம் ஆண்டிற்கான 96வது ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் மாதம் 10ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டால்பி திரையரங்கில் நடைபெற உள்ளது. இந்த ஆஸ்கர் விருது விழாவிற்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற ஓபன்ஹைமர், பார்பி உள்ளிட்ட திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம் பெற்றன.

குறிப்பாக ஓபன்ஹைமர் திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர் மற்றும் திரைக்கதை உள்ளிட்ட 13 விருதுகளுக்கும், புவர் திங்ஸ் 11 விருதுகளுக்கும், Killers of the Flower Moon 10 விருதுகளுக்கும், பார்பி 8 விருதுகளுக்கும், Maestro படம் 7 விருதுகளுக்கான இறுதி பட்டியலுக்கு தேர்வாகி உள்ளன.

இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த இயக்குநர் நிஷா பஹுஜா இயக்கிய To Kill a Tiger திரைப்படம் சிறந்த ஆவணப்படம் பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஜார்கண்ட்டைச் சேர்ந்த இந்திய விவசாயி தன் வாழ்கையில் சந்திக்கும் பிரச்சினைகளையும், கொடூரமான கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தனது 13 வயது மகளுக்கு நீதி கேட்டுப் போராடும் அவரது போராட்டத்தையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டது இந்த ஆவணப் படம். ஏற்கெனவே பல விருதுகளை வென்ற இந்த ஆவணப்படம் ஆஸ்கரை வெல்லுமா என்று ரசிகர்களிடையை பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

ஆஸ்கர் போட்டியின் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ள திரைப்படங்கள் பிரிவு வாரியாக :

சிறந்த திரைப்படம்

அமெரிக்கன் ஃபிக்சன் (American Fiction)

அனடாமி ஆஃப் ஃபால் (Anatomy of a Fall)

பார்பி (Barbie)

தி ஹோல்டோவர்ஸ் (The Holdovers)

கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers of the Flower Moon)

மாஸ்ட்ரோ (Maestro)

ஓபன்ஹைமர் (Oppenheimer)

பாஸ்ட் லைவ்ஸ் (Past Lives)

புவர் திங்ஸ் (Poor Things)

The Zone of Interest

சிறந்த நடிகர்

ப்ராட்லி கூப்பர் – மாஸ்ட்ரோ (Maestro)

கால்மென் டாமிங்கோ – ரஸ்டின் (Rustin)

பால் கியாமாட்டி – தி ஹோல்டோவர்ஸ் (The Holdovers)

சிலியன் முர்பி – ஓபன்ஹைமர் (Oppenheimer)

ஜெஃப்ரெ ரைட் – அமெரிக்கன் ஃபிக்சன் (American Fiction)

சிறந்த நடிகை

ஆன்டே பெனிங் – நைட் (Nyad)

லில்லி க்ளாட்ஸ்டோன் – கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers of the Flower Moon)

சான்ரா ஹூலர் – அனடாமி ஆஃப் ஃபால் (Anatomy of a Fall)

காரே முலிகன் – மாஸ்ட்ரோ (Maestro)

எம்மா ஸ்டோன் – புவர் திங்க்ஸ் (Poor Things)

சிறந்த இயக்குநர்

ஜஸ்டின் ட்ரைட் -அனடாமி ஆஃப் ஃபால்

மார்ட்டின் ஸ்கோர்செஸ் – கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்

கிறிஸ்டோபர் நோலன் – ஓபன்ஹைமர்

யோர்கோஸ் லாந்திமோஸ் – புவர் திங்க்ஸ்

ஜொனாதன் கிளேசர் – The Zone of Interest

இதையும் படிங்க :மக்களவை தேர்தலில் தனித்து போட்டி - மே.வங்கம் முதலமைச்சர் மம்தா அதிரடி அறிவிப்பு! காங்கிரஸ் பதிலடி என்ன?

Last Updated : Jan 27, 2024, 11:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details