ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா, ஏ மாயா சேசாவே, மனம், லவ் ஸ்டோரி, மஜிலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நாக சைதன்யா.
நாக சைதன்யா-சமந்தா விவாகரத்து:இந்நிலையில் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக் ஏ மாயா சேசாவே, மனம், மஜிலி ஆகிய படங்களில் நடித்து கொண்டு இருக்கும்போதில் இருந்து இருவரும் காதலித்த வந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து டோலிவுட்டில் மிகவும் பிரபலமான ஜோடியாக வலம் வந்த நாக சைதன்யா- சமந்தா தம்பதியினர் கடந்த 2021ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர்.
நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம்:இதையடுத்து கடந்த சில மாதங்களாக நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. நடிகை சோபிதா துலிபாலா நடிகை சோபிதா துலிபாலா கடந்த 2013ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். 2016ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர், பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அருண் விஜய்யின் 'ரெட்ட தல' ஷூட்டிங் நிறைவு.. படக்குழு வெளியிட்ட வீடியோ!
வைரலாகும் நாக சைதன்யா இன்ஸ்டாகிராம் பதிவு:அதேபோல் கடந்த ஆக். 8 ஆம் தேதி நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் நிச்சயதார்த்திற்கு பிறகு முதல் முறையாக இருவரும் சேர்ந்து இன்று ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் நாக சைதன்யா பதிவு செய்துள்ளார். அதில் இருவரும் கருப்பு நிற ஆடையில் கண் கண்ணாடி அணிந்து ஸ்டைலிஷாக லிப்டில் நின்று போட்டோ எடுப்பது போன்று போஸ் கொடுத்திருக்கின்றனர்.
அதற்கு கேப்ஷனாக நடிகர் நாக சைதன்யா அனைத்தும் இடங்களுக்கும்! அனைத்து விஷியங்களும் மீண்டும் ஒருமுறை என குறிப்பிட்டிருந்தார். இந்த கேப்ஷன் ரசிகர்களை பல கோணத்தில் சிந்திக்க வைத்தாலும். புதிதாக திருமணம் ஆக போகும் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதாவிற்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்