மதுரை: தமிழ் திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராகத் தனது பயணத்தைத் துவக்கி, தற்போது இயக்குநராக வலம் வருபவர் மணிகண்டன். இவர் காக்கா முட்டை, கடைசி விவசாயி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
அதில் கடைசி விவசாயி மற்றும் காக்கா முட்டை ஆகிய இரு திரைப்படங்களுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தது. இந்த நிலையில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள இவரது வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.1 லட்சம் பணம் மற்றும் 5 சவரன் தங்க நகைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.