தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு: ஜனவரி 22ஆம் தேதி இறுதி விசாரணை! - NAYANTHARA DHANUSH CASE

Nayanthara dhanush case: நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

நயன்தாரா, தனுஷ் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
நயன்தாரா, தனுஷ் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு (Credits - ANI, ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 8, 2025, 3:19 PM IST

சென்னை: இயக்குநர் விக்னெஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த திரைப்படம் நானும் ரௌடி தான். இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்தது. இதனைத்தொடர்ந்து நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதில் நானும் ரௌடி தான் படப்பிடிப்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் உரையாடும் காட்சிகள் பயன்படுத்தப்பட்டது.

இதனையடுத்து நடிகை நயன்தாரா தனது திருமண ஆவணப்படத்தில், 'நானும் ரௌடி தான்' படத்தின் சில படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தது.

இதையும் படிங்க: விஜயின் கடைசி படத்தில் நடிக்கும் அசுரன் நடிகர்!... 'தளபதி 69’ அப்டேட் - TEEJAY JOINS THALAPATHY 69

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ், முன்பு விசாரணைக்கு வந்த போது, நெட்ஃபிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, இனி கால அவகாசம் கேட்கக் கூடாது எனக்கூறி, அன்றைய தினம் அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான இறுதி விசாரணையை தள்ளிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details