தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல்; 60 வாக்குகள் வித்தியாசத்தில் தினாவை தோற்கடித்த M.C.சபேசன்! - இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல்

Film music artists association election: இசையமைப்பாளர் சங்கத்தின் 2023 - 2024ஆம் ஆண்டிற்கான, புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், இசையமைப்பாளர் M.C.சபேசன் வெற்றி பெற்றுள்ளார்.

mcsabesan-defeated-dhina-by-a-margin-of-60-votes-in-music-artists-association-election
இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல்; 60 வாக்குகள் வித்தியாசத்தில் தினாவை தோற்கடித்த M.C.சபேசன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 10:53 PM IST

சென்னை: சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தேர்தல் இன்று (பிப்.18) நடைபெற்றது. அதில் இசையமைப்பாளர் M.C.சபேசன் வெற்றி பெற்றுள்ளார்.

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல், கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்தலில், இதுவரை வாக்குரிமை இல்லாத அசோஸியேட் உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு, நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, தேர்தலுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

அதன்படி, இசையமைப்பாளர் சங்கத்தின் 2023 - 2024ஆம் ஆண்டிற்கான, புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாலசுப்பிரமணியம் தலைமையில் இன்று (பிப்.18) நடைபெறுகிறது.

காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த தேர்தல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 1,025 உறுப்பினர்களில் 566 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். தற்போது தலைவர் பதவிக்காகத் தீனா, M.C.சபேசன் உள்ளிட்டோரும், பொதுச் செயலாளர் பதவிக்காக ஜோனா பக்த குமார், முரளி ராஜ் ஆகியோர் போட்டியிட்டனர்.

அதேபோல், பொருளாளர் பதவிக்காக 5 பேர், துணைத்தலைவர் பதவிக்காக 7 பேர், இணைச் செயலாளர் பதவிக்காக 6 பேர் என மொத்தம் 22 பேர் ஐந்து பதவிகளுக்குப் போட்டியிட்டனர். இசையமைப்பாளர்களுக்கான சங்க தேர்தலில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பாடகர்கள் மனோ, சின்மயி, விபின், இசையமைப்பாளர் தேவா, இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளைச் செலுத்தினார்கள்.

இந்த நிலையில், திரை இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் போட்டியிட்ட M.C.சபேசன் வெற்றி பெற்று இருக்கிறார். மொத்தம் பதிவான 566 வாக்குகளில் M.C.சபேசன் 318 வாக்குகளும், தீனா 247 வாக்குகளும் பெற்றனர். இதன்‌ மூலம் 60 வாக்குகள் வித்தியாசத்தில் M.C.சபேசன் வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க:"இப்படித்தான் உயிர் பிழைத்தோம்"- ராஷ்மிகா மந்தனாவின் கதக்... கதக்.. பயண அனுபவம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details