தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் புதிய அப்டேட்! - MANJUMMAL BOYS Movie Update - MANJUMMAL BOYS MOVIE UPDATE

Manjummal Boys: மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மே.5ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Manjummal Boys
Manjummal Boys

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 6:06 PM IST

சென்னை: மலையாள படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் மே.5ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது மஞ்சும்மல் பாய்ஸ் படம். மொழிகள் தாண்டி அனைத்து பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்தது.

உலகெங்கிலும் பரவலாக ரசிக்கப்பட்ட இந்தப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 200 + கோடிகளை வசூலித்துள்ளது. தமிழில் கடந்த மாதம் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குணா குகையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.

இந்த படத்தைத் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர். மேலும், சிஎஸ்கே வீரர்களுடன், எம்.எஸ்.தோனி ரசிகர்கள் மத்தியில் இப்படத்தைப் பார்த்தார்.

மஞ்சும்மல் பாய்ஸ் படம்: கேரளாவைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். அந்தப் பயணத்தின் போது, குணா குகையைப் பார்வையிடுகிறார்கள். அப்போது ஒருவர் தவறி குகைக்குள் விழுந்துவிட நண்பனைக் காப்பாற்றப் போராடுகிறார்கள். அவர்கள் நண்பனைக் காப்பாற்றினார்களா? என்பது தான் மஞ்சும்மல் பாய்ஸ் படம். மன உறுதி, சகிப்புத்தன்மை மற்றும் நட்பின் பெருமையை அழகாக எடுத்துக்காட்டியது இந்த படம்.

சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி மற்றும் ஜீன் பால் லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைக்க, ஷைஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாபு ஷாஹிர், சௌபின் ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்திற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உறியடி விஜயகுமாரின் 'எலக்சன்' திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Election Movie Release Date

ABOUT THE AUTHOR

...view details