சென்னை:வி6 பிலிம்ஸ் - வேலாயுதம் தயாரித்து இயக்குநர் ஸ்ரீ வெற்றி இயக்கும் படம் 'நாற்கரப்போர்'. இதில் இறுக்கப்பற்று திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற அபர்ணதி நாயகியாக நடிக்கின்றார். மேலும் லிங்கேஷ், அஸ்வின், கபாலி, சுரேஷ் மேனன் உள்பட பலர் நடிக்கின்றனர்.
அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரன் ஒளிப்பதிவாளர்களாக அறிமுகமாகிறார்கள். இத்திரைப்படத்திற்கு தினேஷ் ஆண்டனி இசையமைக்கிறார். சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள 'நாற்கரப்போர்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நேற்று நடைபெற்றது.
நடிகை நமிதா (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த நிகழ்ச்சியில் நடிகை நமீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதனையடுத்து நிகழ்ச்சி மேடையில் அவர் பேசியதாவது,"தமிழ்நாடு மக்களுக்கு அவ்வளவு பெரிய டிமான்டு எல்லாம் கிடையாது. அவர்களுக்கு நல்ல படம் வேண்டும் என்றால் அதில் என்டர்டெயின்மென்ட் இருக்க வேண்டும்.
எமோஷனல், சென்டிமென்ட்& எதாவது மெசேஜ் சொல்ற மாதிரி படங்கள் பிடிக்கும். மேலும் உங்களுக்கு 100 கோடி ரூபாய் பட்ஜெட் படங்கள் வேண்டாம். மிகப்பெரிய இசையமைப்பாளர் கூட வேண்டாம். ஆனால் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு பிடிக்கும்.
நம் நாட்டில் இப்போது விளையாட்டுத் துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. 15 வருடங்களுக்கு முன் விளையாட்டில் அவ்வளவு முன்னேற்றம் இருந்ததில்லை என்று கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் & சானியா மிர்சா உள்ளிட்ட சிலரை உதாரணமாகக் கூறிய நமீதா, கடந்த 10 வருடத்தில் விளையாட்டில் நல்ல வளர்ச்சி இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
தற்போது பாரீஸ் ஒலிம்பிக்கில் மனு பார்க்கர் இரட்டை பதக்கம் வென்றுள்ளார். பிரக்யானந்தா நம் நாட்டுக்கு கிடைத்த பெருமை. செஸ்ஸில் விஸ்வநாதன் ஆனந்த்தும் நம் பெருமை. இப்போது விளையாட்டுத் துறையில் நல்ல பெருமையும், வளர்ச்சியும் இருக்கிறது.
உங்கள் குழந்தைகள் விளையாட்டுத்துறையில் ஆர்வம் இருந்தால் பெற்றோர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டுத் துறை என்பது மிகப்பெரிய பலம். எல்லா குழந்தைகளுக்கும் விளையாட்டு ரொம்ப முக்கியம் என்றார். பின்னர் மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களைப் பார்த்து உங்கள் சட்டை பாக்கெட்டில் செல்போன் வைக்காதீர்கள், அந்த ரேடியேஷனால் இதயத்துக்கு ஆபத்து என அறிவுரை கூறினார்.
இதையும் படிங்க:"தமிழ் சினிமாவுக்கு இப்படிப்பட்ட நடிகை தேவையில்லை" - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆதங்கம்!