தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தனுஷ் படத்தில் இணைந்த நடிகை க்ரித்தி சனோன்... ‘தேரே இஷ்க் மெய்ன்’ ரிலீஸ் அப்டேட் - DHANUSH HINDI MOVIE RELEASE UPDATE

Dhanush Hindi Movie Update: நடிகர் தனுஷ் ஹிந்தியில் நடித்து வரும் ’தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தனுஷ், க்ரித்தி சனோன்
தனுஷ், க்ரித்தி சனோன் (Credits: ANI)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 28, 2025, 4:47 PM IST

சென்னை: நடிகர் தனுஷ் நடிக்கும் ’தேரே இஷ்க் மெய்ன்’ (Tere Ishk Mein) எனும் ஹிந்தி படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த வருடத்தின் இறுதியில் நவம்பர் மாதம் 28ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என ஒரு டீசர் மூலம் அறிவித்துள்ளனர்.

தனுஷ் நடித்து இயக்கிய ’ராயன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து மீண்டும் தனுஷே இயக்கி நடிக்கும் ’இட்லி கடை’, தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் இணைந்து நடிக்கும் ’குபேரா’ என அடுத்தடுத்து படங்களை கையில் வைத்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட தேரே இஷ்க் மெய்ன் ஹிந்தி படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்று (ஜன.28) அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியாகியுள்ள இந்த டீசரின் மூலம் 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தில் க்ரித்தி சனோன் இணைந்துள்ளதையும் தெரிவித்துள்ளனர். படத்தில் அவர் முக்தி எனும் கதபாத்திரத்தில் நடிக்கிறார்.

தனுஷ் ஹிந்தியில் அறிமுகமான 'ராஞ்சனா' திரைப்படத்தின் உலகத்தில் இருந்து வரக்கூடிய கதை என முன்பு வெளியான பட அறிவிப்பு டீசரிலேயே தெரிவித்திருந்தனர். இந்த டீசரிலும் அதனை பிரதிபலிக்கும் விதமாக காதலில் இணைய முடியாத இருவரைப் பற்றிய பாடல் வரிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளன. கலவரங்களுக்கு இடையே நடந்து வரும் க்ரித்தி சனோன் இந்த வசனம் முடியுமிடத்தில் தீயைப் பற்ற வைக்கிறார். ராஞ்சனா போன்றே இதுவும் துயரமான காதல் கதையாக இருக்கும் என தெரிந்துகொள்ள முடிகிறது.

'ராஞ்சனா' திரைப்படம் வெளியாகி பத்தாண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி கடந்த 2023ஆம் ஆண்டு ஜுன் 21 ஆம் தேதி 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தின் அறிவிப்பு டீசரானது வெளியானது. அதில் 2024ஆம் ஆண்டே இத்திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் ராஞ்சனாவின் இரண்டாவது பாகமாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. ராஞ்சனாவில் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் குந்தன், இந்த படத்தில் தனுஷ் கதாபாத்திரத்திற்கு சங்கர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஹாரிஸ் ஜெயராஜ் இடத்தில் சாம் சி.எஸ்...? நடிகர் ரவி மோகன் படத்தின் அப்டேட்

ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்த படத்தை ‘ஏ கலர் எல்லோ புரொடைக்‌ஷன் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஆனந்த் எல் ராய் ஏற்கனவே தனுஷை வைத்து அங்கு ’ராஞ்சனா’ மற்றும் ’அத்ரங்கி ரே’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படம் மூலம் மூன்றாவது முறையாக தனுஷுடன் இணைந்துள்ளார். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details