தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

திரு.மாணிக்கம் திரைப்படம் ஒரு அற்புதமான படைப்பு - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு! - RAJINIKANTH

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி நடித்துள்ள 'திரு.மாணிக்கம்' படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியுள்ளார்.

நடிகர்கள் சமுத்திரக்கனி, ரஜினிகாந்த்
நடிகர்கள் சமுத்திரக்கனி, ரஜினிகாந்த் (Credits ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 2, 2025, 9:25 PM IST

Updated : Jan 3, 2025, 9:00 AM IST

சென்னை:நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி நடித்துள்ள 'திரு.மாணிக்கம்' படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியுள்ளார்.

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் திரு.மாணிக்கம் இப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி வெளியனது. உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையை மையமாக கொண்ட திரு.மாணிக்கம் விமர்சனரீதியாக பல்வேறு தரப்புகளில் பாராட்டை பெற்று வருகிறது.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரு.மாணிக்கம் படத்தை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒரு நல்ல படத்திற்கு அடையாளம், படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள், கதாபாத்திரங்கள் ஒரு மூன்று, நான்கு நாட்களாவது நினைவில் வந்துகொண்டெ இருக்கணும். அந்த படத்தில் வரும் எதாவது ஓர் நல்ல விஷயம், நம் வாழ்க்கையில் நாமும் கடைபிடிக்கணும் என்ற எண்ணம் உருவாகணும் அந்த மாதிரி சமீபத்தில் நான் பார்த்த திரு.மாணிக்கம் என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு.

உண்மை சம்பவத்தை வைத்து திரைக்கதை, வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமி அவர்கள், தான் ஓர் அற்புதமான இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார். திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. இந்த திரைப்படம் இவ்வளவு சிறப்பாக உருவாக பணியாற்றியிருக்கும் மைனா சுகுமார், விஷால் சந்திரசேகர், குணா ரகு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் எனது அருமை நண்பர் சமுத்திரகனி, மதிப்பிற்குரிய பாரதிராஜா மற்றும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், இந்த படத்தை தயாரித்திருக்கும் ஜி.பி. ரவி குமார் மற்றும் என்னுடைய அருமை நண்பர் லிங்குசாமி மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.' என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த, சமுத்திரகனி இருவரும் 'காலா' படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். மேலும் ரஜினிகாந்த் பல சிறு பட்ஜெட் படங்களை பாராட்டியுள்ளார். கடந்த வருடம் வெளியான 'வாழை' உள்ளிட்ட பல படங்களை அவர் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது

Last Updated : Jan 3, 2025, 9:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details