தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

காயின் டாஸ்கில் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட ஆண்கள் அணி... பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை!

Bigg Boss 8 Tamil: பிக்பாஸ் வீட்டில் நேற்று நடைபெற்ற கில்லர் காயின் டாஸ்கில் ஆண்கள் அணியினர் விளையாடிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் விஜய் சேதுபதி
பிக்பாஸ் விஜய் சேதுபதி (Credits - Vijay Television)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 23, 2024, 10:58 AM IST

சென்னை: பிக்பாஸ் வீட்டில் நேற்று வைக்கப்பட்ட கில்லர் காயின் டாஸ்க் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் எப்போதும் போல நேற்று பாடல் ஒளிக்காத நிலையில் ஆண்கள் அணியினர் புது முயற்சியாக பாடல் பாடி நாளை தொடங்கினர். புதுமுயற்சி ரசிக்கும்படியாக இல்லை. பின்னர் திடிரென்று ஆண்கள் அணிக்கு அனுப்பப்பட்ட சாச்சனாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டது.

அப்போது சாச்சனாவுடன் அருண் கன்ஃபசன் ரூமிற்கு சென்றார். அப்போது பெண்கள் இதுதான் சான்ஸ் என, ஆண்கள் அணியினர் ”நீங்க கன்ஃபசன் ரூமிற்கு வந்தீங்க, அதனால நாங்க கொடுத்த வாக்கு செல்லாது” என தெரிவித்தனர். இதனையடுத்து இரு அணியினருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. பெண்கள் அணியினர் வாக்குறுதி குறித்து நாளை சொல்வதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் ஆண்கள் அணியில் முத்துக்குமரன் பெண் வேடமிட்டு அவருக்கு ரஞ்சித் கணவராகவும், இந்த ஜோடிக்கு சாச்சனா மகளாகவும் நடித்தனர். இதில் முத்துக்குமரனனின் நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தது. இந்த டாஸ்கில் கிச்சன் பொறுப்பாளராக அன்ஷிதாவும், ஹோட்டல் மேலாளராக பவித்ராவும் இருந்தனர். ஹோட்டலுக்கு வந்த திபக்கின் ஆர்டரை பெண்கள் அணியினர் சரியாக செய்து கொடுத்தனர்.

பின்னர் காதல் தோல்வியில் குடி போதையில் ஹோட்டலுக்கு வந்த வாடிக்கையாளர்களாக விஷால், அருண் நடித்தனர். அப்போது அருண் bulls eye என்ற முட்டையில் போடப்படும் சாப்பாடு வகையை ஆர்டர் செய்தார். இதற்கு ஹோட்டல் நிர்வாகத்தினரான பெண்கள் அணி, ஆர்டர் வர நேரம் ஆகும் என கூறினர். அப்போது அருண், விஷால் "நாங்கள் வேற ஹோட்டலுக்கு போறோம்" என புகார் தெரிவித்தனர்.

இதன் விளைவாக ஹோட்டல் நிர்வாகம் சரியில்லை என பவித்ரா ஹவுஸ் கீப்பிங் அணிக்கு மாற்றப்பட்டார். ஸ்டார் ஹோட்டலின் புதிய மேலாளராக சுனிதா நியமிக்கப்பட்டார். ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் பல ரகளைக்கு நடுவில் முடிவடைந்தது. இதனையடுத்து முக்கியமான கில்லர் காயின் டாஸ்க். இந்த டாஸ்கின் படி காயினை எதிர் அணியினர் ஒருவர் மீது ஒட்ட வேண்டும். பஸர் அடிக்கும் போது காயின் யார் மீது ஒட்டப்பட்டுள்ளதோ, அவர் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்.

இந்த ஆட்டம் ஒடிப்பிடித்து விளையாட வேண்டும். ஆனால் ஆண்கள் அணியினர் தங்கள் உடல் பலத்தை பயன்படுத்தி ஒரு பெண்ணை டார்கெட் செய்து ஆக்ரோஷமாக மடக்கி பிடித்து விளையாடினர். பெண்கள் அணியினரின் பலவீனத்தோடு ஆண்கள் அணியினர் விளையாடியது மிகவும் தவறான செயலாகும். பிக்பாஸ் 3வது சீசனில் இதே போன்ற டாஸ்க் வைக்கப்பட்டது. ஆனால் அப்போது ஆண்கள் அணி உடல் வலிமையை வைத்து மோதாமல் ஓடிப் பிடித்து விளையாடினர்.

இதையும் படிங்க: 1000 நாட்கள் ஓடி வரலாறு படைத்த 'விண்ணைத்தாண்டி வருவாயா'... ஒரு வருடத்திற்கு மேல் ஓடிய தமிழ் படங்கள் என்ன தெரியுமா?

அதே நேரத்தில் இந்த சீசனில் ஆண்கள் இந்த டாஸ்கை அணுகிய விதம் நியாயமானதாக இல்லை. சமூக வலைதளங்களில் இந்த பிக்பாஸ் டாஸ்கிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சர்சசை ஒரு பக்கம் இருக்க காயின் டாஸ்கின் போது, தர்ஷா ரஞ்சித்தின் அந்தரங்க பாகத்தை மிதித்து விட்டதாக புகார் தெரிவித்தார். இதே போன்று காயின் டாஸ்கில் ஆண்கள் அணியினர் முரட்டுத்தனமான ஆட்டம் குறித்து பெண்கள் அணியினர் புகார் கூறியிருந்தால் என்னவாகும்?. இந்த விவகாரம் குறித்து வார இறுதியில் விஜய் சேதுபதி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details