சென்னை:96 படத்தின்இயக்குநர்பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் மெய்யழகன். இப்படத்தை நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
தற்போது இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் அரவிந்த் சாமி சைக்கிள் ஓட்ட பின்னாடி நடிகர் கார்த்தி அமர்ந்திருப்பது போன்ற போஸ்டரையும், காளையுடன் கார்த்தி மோதும் மற்றொரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில், நடிகர் ராஜ்கிரண், நடிகை ஸ்ரீ திவ்யா ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும், மெய்யழகன் படத்தின் பூஜை வீடியோ கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் படக்குழு அறிவித்தது. இதன் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.