சென்னை:தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடித்துள்ள படம் தேவரா. இப்படம் இம்மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் புரொமோஷன் நிகழ்ச்சி இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
இதில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி, இயக்குனர் கொரட்டல சிவா, இசை அமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜூனியர் என்டிஆர், “சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷலான இடம். நிறைய பேருக்கு தெரியாது, என்னுடைய குச்சிபுடி பயிற்சி இங்கதான் தொடங்கியது.
தேவரா படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. நம்புங்கள் இந்த படம் உங்கள் அனைவருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும். கலையரசன் இந்த படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் வெளியானதும் பார்ப்பீர்கள். ஜான்வி எப்போதும் போல் சிறந்த நடித்துள்ளார்.