தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விவாகரத்து வழக்கு: ஜெயம் ரவி - ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை!

விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி ஆகியோர் சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினர்.

சமரச தீர்வு மையத்துக்கு வந்த ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி
சமரச தீர்வு மையத்துக்கு வந்த ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி (Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2024, 7:51 PM IST

சென்னை:நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

இதையும் படிங்க:பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்!

இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தபோது, இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, இந்த வழக்கு உயரநீதிமன்ற சமரச தீர்வு மையத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி நேரில் ஆஜராகி இருந்தார். பின்னர் இருவரிடமும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மத்தியஸ்தர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, விசாரணையை டிசம்பர் 7ம் தேதி தள்ளிவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Etv Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details