தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'இந்தியன் 2' இசை வெளியீட்டு விழா: மிகச் சிறந்த கலைஞன்; நடமாடும் பல்கலைக்கழகம் - கமல் குறித்து நாசர் பெருமிதம்! - Indian 2 Audio Launch - INDIAN 2 AUDIO LAUNCH

Indian 2 Audio Launch: 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் நாசர், இந்தியன் தாத்தாவாக நடிக்கும் வலி என்னவென்று எனக்கு தெரியும். மேக்கப் போட பொறுமையாக உட்கார ஒரு சக்தி வேண்டும். உணர்ச்சிகளை வெளிப்படுத்த கண்கள், கன்னங்கள் உள்ளிட்டவை முக்கியம். மேக்கப் போட்ட பின்பும் கமலின் கன்னங்கள் துடிக்கும்” என்று கூறினார்.

நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் நாசர்
நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் நாசர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 9:33 AM IST

Updated : Jun 2, 2024, 10:02 AM IST

சென்னை: சங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்தியன் 2 படம் அடுத்த மாதம் 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் நாசர் (Video Credits - ETV Bharat Tamil Nadu)

படத்தின் நீளம் கருதி, இந்தியன் 2 மற்றும் 3 என இரண்டு பாகங்களாகவும் படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் லைக்கா புரோடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று (ஜுன் 1) 6 மாலை அளவில், சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நாசர், “படத்தை உருவாக்கியவர்களுக்கு வாழ்த்துகள். தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மரியாதை. இந்தப் படத்தின் வெற்றி என்னவாக இருக்கிறது என்பதை நேர்த்தியான இந்த நிகழ்ச்சி தெளிவாக சொல்கிறது.

கமல், சுபாஸ்கரன், சங்கர் மூவருக்கும் வெற்றி என்பதை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்களுக்கு வெற்றி முக்கியமல்ல. நேர்த்தியாக செய்யக்கூடிய உழைப்பு அவர்களிடம் இருக்கிறது.

கமல் பற்றி பேச வேண்டும் என்றால் எனக்கு வருடக் கணக்காகும். எல்லோரும் சொல்வதை போல அவர் நடமாடும் பல்கலைக்கழகம். உலகின் மிகச் சிறந்த கலைஞன். தமிழ் சமூகத்தில் வாழும் உலகின் மிகச் சிறந்த நடிகர். விட்டுக்கொடுக்கின்ற குணம் கமலுக்கு உண்டு.

இந்தியன் தாத்தாவாக நடிக்கும் வலி என்னவென்று எனக்கு தெரியும். மேக்கப் போட பொறுமையாக உட்கார ஒரு சக்தி வேண்டும். இந்தியன் படத்தை பலமுறை போட்டுப் பார்த்தேன். இந்த கதாபாத்திரத்தை வேறு யாராவது செய்ய முடியுமா என்று. உணர்ச்சிகளை வெளிப்படுத்த கண்கள், கன்னங்கள் உள்ளிட்டவை முக்கியவை. மேக்கப் போட்ட பின்பும் அவர் கன்னங்கள் துடிக்கும்.

இயக்குநர் சங்கர் உடனான அந்நியன் படம் எனது திரை வாழ்வில் முக்கியமான படம். அவருடைய ஜீன்ஸ் படத்திலும் நடித்துள்ளேன். ஆயிரம் கோடி ரூபாய் போட்டாலும் உணர்ச்சிகள் சரியாக உட்காரவில்லை என்றால் அவ்வளவு கோடியும் ஒரே காட்சியில் போய்விடும். ஜீன்ஸ் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் சங்கருக்கு முக்கியம். நடிகர்களை நடிப்பின் ஆழத்திற்கு எடுத்துச் சென்று சுகானுபத்தை கொடுப்பவர் சங்கர். சங்கரிடம் ஒரு லீடர்ஷிப் குவாலிட்டி இருக்கும். ஒரு தருணத்தில் கூட சங்கர் அதிர்ந்தோ கோபப்பட்டோ இருந்ததில்லை. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். திரைத் துறையின் சார்பாக திரை ரசிகர்கள் சார்பாக சுபாஷ்கரனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க:கமல்ஹாசனிடம் திட்டு வாங்கிய நெல்சன், லோகேஷ்.. இந்தியன் 2 விழாவில் சுவாரஸ்ய பகிர்வு! - Indian 2 Audio Launch

Last Updated : Jun 2, 2024, 10:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details